Thursday, 10 May 2012

விளம்பரங்களில் கேவலமானவை, நல்லவை

ரொம்ப மட்டரகமான விளம்பரம் என்று யுனிவர் செல்லின் விளம்பரத்தை சொல்லலாம். நம்மோடு இவ்வளவு காலமாக பழகிய ஒரு பொருளை இப்படியா விடை கொடுப்போம். ஹோம குண்டத்தில் போடுவது, வாஷிங் மெஷினில் போடுவது, பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது என்று கடுப்பேற்றும் காட்சிகள். என்ன எதிர்மறையான சிந்தனை? இதை விட மஹா மட்டமான விளம்பரம் இருக்கமுடியாது.

அடுத்த கேவலமான விளம்பரம், கனவன் இல்லாத போது கள்ள காதலன் வந்துவிடுகிறான். திடீரென கனவனும் வந்து விடுகிறான். கள்ள காதலன் வி.ஐ.பி. ஸ்ட்ராலி பேக் விற்பனையாளன் மாதிரி நடித்து கொண்டே ஜன்னல் வழியாக தப்பித்து ஓடிவிடுகிறேன். இந்த மாதிரி விளப்பரம் எடுத்தவர்களை கழுவில் ஏற்றினால் என்ன?

கேவலமான இரண்டு விளம்பரங்களை பற்றி சொல்லிவிட்டு நல்ல விளம்பரங்களை சொல்லாமல் விட்டால் எப்படி? காட்பரி சாக்லெட்டின் இனியதொரு ஆரம்பம் என்ற தலைப்பில் சில மாதங்கள் முன்னால் வந்த விளம்பரம் நான் சொல்லப்போவது. ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போக தன் காதலன் காரில் கனத்த சோகத்துடன் அமர்ந்து, "ம்... போ" என்கிறாள். அதற்கு முன்னால் பின்னால் இருப்பவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு போகலாமே என்று சொல்லி கார் லைட்டை போடுகிறான் காதலன். பின்னால் அவள் அப்பா, அம்மா, சகோதரன். அப்பா, "போகிறதுதான் போகிறாய், ஒரு இனிய ஆரம்பத்துடன் தொடங்கு என்று காட்பரி சாக்லெட்டை நீட்டுகிறாள். அப்போது அந்த பெண் காட்டும் முக உணர்ச்சிகள் பிரமாதம். கொஞ்சம் அதிர்ச்சி. அதிர்ச்சியை தொடர்ந்து மகிழ்ச்சி. அதை விட அந்த சகோதரன், ஓகே. ஓகே. பரவாயில்லை, சாக்லெட் சாப்பிடு என்று சைகை காட்டுவதும் பிரமாதம். மொத்தத்தில் அந்த விளம்பரம் ஒரு உணர்ச்சி குவியல். இன்னும் ஒரு ரசனையான விஷயம், அந்த பெண் வீட்டை விட்டு வரும் போது தனது டெட்டி கரடியை எடுத்துக் கொண்டு கடைசியாக தன் குடும்ப போட்டோவை பார்த்துவிட்டு வருவாள். அதன் பிறகு அந்த தீமில் வந்த எந்த விளம்பரங்களும் மனசில் நிற்கவில்லை.·

1 comment:

சீனு said...

நீங்கள் சொன்ன அந்த கட்பெரிஸ் விளம்பரத்தை நான் பார்த்தது இல்லை, உங்கள் எழுத்தின் மூலம் காட்சி அமைப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மட்ட ரகமான விளமபரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் தான் உள்ளன.