மூக்கில் பஞ்சை வைத்து
நெற்றியில் ஒற்றை காசும் வைத்து
கொண்டு போனார்கள் கலியனை
மத்தள முழக்கத்தில்
மப்பின் உச்சத்தில்
குதியாட்டம் போட்டன
கிஷ்கிந்தர்கள் கூட்டம்
மூத்த தலைமுறையை மறந்திடாமல்
மலர் மாலைகளை பிய்த்து பிய்த்து
சாலையெங்கும் குப்பையாக்கியது
இன்னொரு கூட்டம்
சிதறிய மாலை துணுக்குகளுக்கு
ஓடி வந்தன ஆடுகள் கூட்டம்
தன் சுற்றமும் நட்பையும்
கொன்று தின்ற கலியன் மீது கோபம் கொண்டு
அத்தனையையும் தின்று தீர்த்தன ஆடுகள்.
ஆனால் அவைகள் முட்டாள் ஆடுகள்
ஆடு மாதிரியே வாழ்ந்துவிட்டு போன
கலியனின் கருமாதி விருந்துக்கு
உணவாகப் போவதை அறியாத
முட்டாள் ஜீவன்கள்.
நெற்றியில் ஒற்றை காசும் வைத்து
கொண்டு போனார்கள் கலியனை
மத்தள முழக்கத்தில்
மப்பின் உச்சத்தில்
குதியாட்டம் போட்டன
கிஷ்கிந்தர்கள் கூட்டம்
மூத்த தலைமுறையை மறந்திடாமல்
மலர் மாலைகளை பிய்த்து பிய்த்து
சாலையெங்கும் குப்பையாக்கியது
இன்னொரு கூட்டம்
சிதறிய மாலை துணுக்குகளுக்கு
ஓடி வந்தன ஆடுகள் கூட்டம்
தன் சுற்றமும் நட்பையும்
கொன்று தின்ற கலியன் மீது கோபம் கொண்டு
அத்தனையையும் தின்று தீர்த்தன ஆடுகள்.
ஆனால் அவைகள் முட்டாள் ஆடுகள்
ஆடு மாதிரியே வாழ்ந்துவிட்டு போன
கலியனின் கருமாதி விருந்துக்கு
உணவாகப் போவதை அறியாத
முட்டாள் ஜீவன்கள்.
1 comment:
நன்றாக இருக்கு கவிதை...
என் இவ்வளவு கோபம்?
தவிர கவிதையின் ஆரம்பம் முடிவு வெட்டியானிடம் இருக்குமோ என்று எண்ண வெய்தது. ஆடு வரும் என்று எதிர்பார்க்க வில்லை!
Post a Comment