என் ஆசை மச்சானே !
ஜனமித்ரன் - 01-15 பிப்ரவரி 2007
வெள்ள வேட்டி கட்டி வீதியில போற மச்சான்
சொல்ல வேணுமின்னு சேதியொண்ணு வச்சிருக்கேன்
ஆத்தங்கர ஓரத்தில அரை இருட்டு நேரத்தில
கூடி நாம பேசியதும் குலாவி திரிஞ்சதுவும்
ஊரு சனம் மத்தியில ஒரு மாசமா இருக்குதைய்யா
பொல்லாப்பு வேணாமைய்யா புரிஞ்சுக்க என் மனச
அப்பனையும் ஆத்தாளையும் அளைச்சுக்கிட்டு நீ வரணும்
ஊரையெல்லாம் கூட்டி வச்சு தேதி ஒண்ணு குறிக்கோணும்
அறுப்பு ஆன பின்னே அம்மாசி போன பின்னே
மாரியாத்தா கோயிலிலே மால நாம மாத்திக்கணும்
கால நேரம் பாக்காம சீக்கிரமா செய்யு மச்சான்
காத்திருக்கா உம் மயிலு கன்னாலம் பண்ணிக்க.
2 comments:
very nice sir ur kavithai
by
k.chella
hp
ARUMAINGA
Post a Comment