04.04.2007 தேதியிட்ட நிலாச்சாரல்.காம் இணைய இதழில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன.
உங்கள் வசதிக்கு இதோ இங்கே:
இந்தியா Inc.
பற்றற்றிரு!
சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி
தீபாவளி
ஊரெங்கும் திருவிழா
விண்ணில் கந்தக பூக்கள்
என் கண்களில் வெளிச்சம்
சிவகாசி குழந்தைகளின் அலுமினியக் கைகள்
தேசிய சிக்கல்
இந்த தேசத்திற்கு ஆபத்து
முழங்கிய தலைவருக்கு விக்கல்
தொண்டர்களின் ஓட்டம்
கிடைத்தது பெப்சி
பொது அறிவு
வந்தேமாதரம் பாடுங்கள்
குழந்தைகள் பாடினார்கள்
தாய் மண்ணே வணக்கம்