TINA Factor என்று அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
அதில்தான் காங்கிரசஸ் ரொம்பவும் நம்பியிருக்கிறது. 2014ல் எப்படியும்
மீண்டு வந்து விடுவோம். இதே மாதிரி கல்லா கட்டுவதை தொடராலாம் என்று தெம்பாக
இருக்கிறார்கள். அதாவது There is no alternative (TINA).
கம்யூனிஸ்டுகளும் சரி, பல மாநில கட்சிகளும் சரி தங்கள் அரசியல்
வாழ்வுரிமைக்காக பாஜாகவை எதிர்த்து செயல்பட வைக்கிறது. குறைந்த பட்சம்
பாஜகாவை ஆதரிக்காமல் எட்டி நிற்கின்றன. மதவாத தீட்டு பட்டுவிடும் என்றும்
அதனால் தங்கள் ஓட்டுகள் சரிந்துவிடும் என்று கவலை படுகின்றன. பாஜகவால்
தனித்தும், சில மாநில கட்சிகளின் ஆதரவோடும் பெரும்பான்மை எடுத்துவிட
முடியாது. எனவே குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பாஜாக
ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காங்கிரஸ்
வந்து விடும். இது 2004ல் அவர்கள் பெற்ற வெற்றி மாதிரி இருக்கும்.
ஆளாளுக்கு காங்கிரஸை மிரட்டுவார்கள். ஆனால் கவிழ்த்து விட மாட்டார்கள்.
காங்கிரசும் ரொம்ப பயந்த மாதிரி காட்டிக் கொண்டு தங்கள் கொள்ளையை தொடரும்.
இந்த அவலநிலை இந்தியாவுக்கு நல்லதல்ல. அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்ல
முடியும். கெடுதலை பற்றி நன்றாக புரிந்து கொண்டால நல்லதை நோக்கி மனசு
நகரும்.
1 comment:
நல்ல பதிவு...
எனது தளத்தில்
மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....
Post a Comment