Friday, 7 September 2012

தங்கத்தில் முதலீடு

நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் என்று நினைக்கிறார்கள். அது மிக மிக தவறானது.

தங்கத்தை பணமாக மாற்றும் போது பாதிக்கு பாதி போய்விடும். எனவே, தங்கத்தை தங்கமாக வைத்துக் கொண்டு, அதன் மீது கடன் மட்டுமே வாங்க முடியும். இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.

பழைய தங்க நகையை போட்டு புதியது வாங்கும் போது இதேதான் நடக்கிறது. நகை கடைக் காரர்கள்தான் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய வர்கத்துக்கு இது புரிவதில்லை.

வெறும் விலையை மட்டுமே பார்ப்பது முட்டாள்தனமானது. எந்த பொருளுக்கும் அது பணமாக மாறும் போது கிடைக்கும் ஈவு தொகையைத்தான் கனக்கிட வேண்டும்.

நீங்கள் எந்த நகைக்கடைகாரர்களிடமாவது அல்லது தங்க காசு விற்கும் வங்கிகளில் திருப்பி வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள்? உண்மை நிலை புரியும்.

குடும்பத்திற்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கு மேல் வாங்கி வைத்துக் கொள்ளுதல், அவசிய நேரங்களில் சிக்கலை உருவாக்கும்.

6 comments:

Unknown said...

e gold ல் முதலீடு செய்யலாமே.செய்கூலி சேதாரம் இல்லை எளிதாக விற்கலாம்

பழூர் கார்த்தி said...

நல்ல கருத்து.. ஆனால் பாதிக்கு மேல் போய்விடுமா என்ன? சேதாரம், தேய்மானத்தை பொறுத்து விலை குறையும் என நினைக்கிறேன்!

***

தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே இருப்பதால் இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என நினைக்கிறார்கள்!

Yaathoramani.blogspot.com said...

வெறும் விலையை மட்டுமே பார்ப்பது முட்டாள்தனமானது. எந்த பொருளுக்கும் அது பணமாக மாறும் போது கிடைக்கும் ஈவு தொகையைத்தான் கனக்கிட வேண்டும்.//

நல்ல கருத்து
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

If you buy ans sell as gold coins/ biscuits there is appreciation.there is no சேதாரம். For ornaments there is some சேதாரம் and small reduction in price. But the gold price rise mostly offset this.

அமர பாரதி said...

I think you are wrong and definitely we will not lose half. Making charges is around 10 - 15% and that will be compensated by rate increase. If you buy KDM jewellery you dont have to worry about setharam. Since you can get loans very easily on gold, investing in gold is the best investment.

சிநேகிதன் அக்பர் said...

இது பொதுவான தங்கள் கருத்து என நினைக்கிறேன். மற்றபடி பேங்கில் பணம் போடுவதை விட தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல முடிவுதான்.