Tuesday, 16 September, 2008

கம்பன் கண்ட இளைஞர் - அமுதசுரபி - செப்டம்பர் 2008சென்ற மாதம் சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில், நடந்த வெவ்வேறு இலக்கிய போட்டிகளில், பத்து பரிசுகளை தட்டிச் சென்றிருக்கிறார் 19 வயது இளைஞர் ஒருவர். இவரது பெயரிலேயே இலக்கிய மணம் வீசுகிறது. சாதாரணமாக 'சக்கரவர்த்தி' என்று அழகு தமிழில்(!!) பெயர் வைத்துக் கொள்ள சைப் படும் இந்த கால கட்டத்தில், இவர் 'மன்னர் மன்னன்' என்ற செந்தமிழ் பெயரைக் கொண்டுள்ளார். "எனது தாயாருக்கும், தந்தைக்கும் வடமொழி சொற்களாலான பெயர்கள் அமைந்துவிட்டன (ராஜமாணிக்கம், சரோஜா). அதை மறுக்கும் விதமாக எனக்கு நல்ல தமிழில் பெயர் வைத்தார்கள்" என்கிறார் இவர்.

தனது இலக்கிய ர்வத்துக்கு தன் மாமாவை அடையாளம் காட்டுகிறார்."என் மாமா ஒரு தமிழாசிரியர். இலக்கிய ஈடுபாடு கொண்டவர். மூப்பின் காரணமாக அவரால் அதிகம் படிக்க முடியவில்லை. எனவே என்னை தினமும் கம்பராமாயணம் படிக்கச் சொல்லுவார். அவர் 'கம்பராமாயணத்தில் திருக்குறளின் தாக்கம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். மாணவப் பருவத்திலேயே என்னையறியாமல் என் ழ்மனதில் கம்பராமாயணத்தின் மீது ர்வம் பதிந்து விட்டது என நினைக்கிறேன்." என்கிறார் மன்னர் மன்னன்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர், மேல் படிப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். எதேச்சையாக 'இலக்கியச் சாரல்' என்ற அமைப்பின் மாதாந்திர கூட்டத்திற்கு போயிருக்கிறார். "அங்குதான் என் இலக்கிய ர்வம் தொடங்கிற்று என்று சொல்லலாம். அப்போதிலிருந்து நிறைய புத்தகங்கள் படிக்க ரம்பித்தேன். அது ஒரு வெறியாகவே வளர்ந்தது. தினமும் என்னுடைய இரண்டு மணி நேர பேருந்து பயணத்தில் ஏதாவது ஒரு இலக்கிய புத்தகம் இடம் பெற்றிருக்கும். எனது செலவுகளை மிச்சம் பிடித்து புத்தகங்களாக வாங்கினேன். அப்படியாக என்னிடம் இப்போது 2000 புத்தகங்கள் சேர்ந்துவிட்டன" என்று சொல்லி புன்னகைக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.

"சென்ற வருடம் கம்பன் விழாவில் பல போட்டிகளில் கலந்து கொண்டேன். எனக்கு ஒரே ஒரு பரிசுதான் கிடைத்தது. கொஞ்சம் மனவருத்தம் இருந்தாலும், எனது முயற்சியை விடவில்லை. கிடைத்த ஒரு வருட கால இடைவெளியில் என்னை இன்னும் பட்டை தீட்டிக் கொண்டேன். முழு மூச்சாக என்னை தயார் செய்து கொண்டேன். எந்த ஐயப்பாடு வந்தாலும், குறிப்புகள் தேவைப்பட்டாலும், தயக்கமின்றி வல்லுனர்களை தொடர்பு கொண்டேன். மிக குறிப்பாகச் சொல்லப்போனால், ஹைதராபாதைச் சேர்ந்த இளையவன் என்ற என் இனிய நண்பர் பேருதவி செய்தார். போர்க்கால அடிப்படையில் எனது எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி இருந்ததால், போட்டிகளில் எனக்கு எந்த சிரமும் இல்லை. மிக எளிதாக பத்து பரிசுகளை பெற்றுவிட்டேன்." என்று முடித்தார் வெற்றி நாயகர், மன்னர் மன்னன்.

வெற்றிகள் என்றைக்குமே வியக்க வைக்கும். அதன் பின்னால் இருக்கும் உழைப்பு நம்மை யோசிக்க வைக்கும். இந்த இளைஞரின் வெற்றி ஒரு சரித்திரம் என்றால், அது நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

No comments: