திரு சுஜாதா அவர்களை முதன் முதலாக ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. 1997 என
நினைக்கிறேன். எங்கள் நாடகத்தை பார்க்க வந்திருந்தார். கொஞ்சம் கூட
தயங்காமல், கிடைத்த அரிய சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, வார இதழ்கள்
மீது எனக்குள்ள கோபத்தை கொட்டினேன். அப்போது அவர் ஒரு சில டிப்ஸ்
கொடுத்தார். அது எனக்கு வேதமாகவே தோன்றியது.
"நடராஜன், ஒரு பத்திரிக்கை உங்கள் கதையை திருப்பியனுப்பிவிட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன மாதிரி எதிர்பார்க்கிறார்கள் என்பதை நுட்பமாக கவனியுங்கள். அதற்கு ஏற்றமாதிரி உங்கள் கதைகளை அமையுங்கள். சோம்பல் படாமல் அடித்து, திருத்தி, மாற்றியமையுங்கள். உங்கள் சிந்தனை முற்றிலும் புதிய கோணத்தில், வித்தியாசமான களன்களில் இருந்தால் நல்லது. பளிச்சென்று தொடங்குங்கள். தொய்வில்லாமல் விறுவிறுவென சொல்லுங்கள். முடிவை வாசகன் நெருங்கும் போது 'அட' என்று அவன் வியக்கும்படி செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வெற்றி" என்றார். அதன் பிறகுதான் என் பல சிறுகதைகள் பிரசுரம் ஆயின.
சிறுகதையில் ஒரு வாக்கியத்தை உருவினால் அந்த சிறுகதையே சரிந்து விடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும் என்றார்.
சுஜாதாவின் ஆரம்ப கால கதைகளில் நீரஜா என்ற கதாபாத்திரம் வரும். என் இரண்டாவது பெண்ணின் பெயர் நீரஜா.

1 comment:
அருமையான பதிவு.
நன்றி.
வாழ்த்துகள்.
Post a Comment