Tuesday 31 July, 2012

சொத்து சேர்க்கும் டிரஸ்டுகள்

டிரஸ்ட் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பல அமைப்புகளை கோடி கோடியாக சொத்துக்கள் வைத்திருக்கின்றன. எந்த உயரிய நோக்கத்துக்காக அந்த டிரஸ்ட் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் அடுத்த தலைமுறையில் கானாமல் போய்விடுகிறது. வாரிசு சண்டைகள் உருவாகின்றன. டிரஸ்ட் என்பதே ஒரு பொது நலனுக்கான பொது சொத்து. அதில் வாரிசு உரிமை என்பதே கேவலமாக படுகிறது.

இன்று பல டிரஸ்டுகள் ஒரு தனியார் நிறுவனம் போல செயல்படுகின்றன. தென் சென்னையில் முப்பாத்தம்மன் கோயில் அருகில் இருக்கும் ஒரு சபாவின் செயலாளர் காலமாகியதும் அதன் அடுத்த செயலாளராக அவர் மகன்தான் வந்தார். இது போல பல டிரஸ்டுகளில் வாரிசுரிமை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தான் சேர்த்து வைத்ததை தன் வாரிசுக்கு கொடுக்கும் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்தான் இந்த டிரஸ்டுகளின் முதலாளிகள் (!!!!!).

சொத்து சேர்த்து வைத்துவிட்டு அந்த தலைவர் போனதும், கீழ் மட்டத்தில் குடுமிபிடி சண்டைகள் வருகின்றன. சித்தாந்தத்தில் வேறுபாடுகள் வரலாம் என்ற கருத்துக்கு இடமே இல்லை. தலைவன் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் சித்தாந்த புரிதலில் இரண்டை நிலை ஏற்படுகிறது. உண்மையில் அது நானா நீயா என்ற ஈகோ பிரச்சனைதான். அடுத்து சொத்து ஆளுமையில் சண்டை வருகிறது.

இப்படித்தான் பெரியார் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள் சண்டை வந்தது. இன்று பெரியார் சொத்து முழுவதும் ஒருவர் ஆளுமையில் வந்துவிட்டது. இனி அவர், தன் காலத்துக்கு பிறகு யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பதை காலம் நிச்சயம் பதிவு செய்யும். அது அவர் வாரிசுக்கு போய்விட்டால், முன்னே சொன்ன சென்னை சபாவுக்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காது.

ஆழியார் வேதாத்ரி மகரிஷ் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள்ளும் சண்டை வந்தது. ராம்யோகி சுரத்குமார் மடத்தில் ஒரு சிலர் ஓரம் கட்டப்பட்டனர். ஏன், ஆரோவில்லில் கூட பெங்காலி கோஷ்டிகளுக்கும், தமிழ் கோஷ்டிகளுக்கும் மௌனயுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.

இஸ்கானில் சண்டை. செங்கல்வராயன் டிரஸ்டில் சண்டை. இது போல சொத்துக்கள் சேர சேர சிக்கல்கள் அதிகமாகி கொண்டே போகிறது. சொத்துக்கள் இல்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த சித்தாந்தத்துக்கே மூடுவிழா.

ஒரு முறை காஞ்சி மஹா பெரியவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பழங்கள் வாங்கிக் கொண்டும் போயிருந்தார். பெரியவர் அந்த பழங்களை அங்கிருப்பவர்களிடம் பிரசாதமாக ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டார். வந்தவர், "இந்த மடத்துக்கு எதாவது செய்யட்டுமா?" என்று கேட்டாராம். உடனே பெரியவர், "ஆபீஸில் ஏதோ தேவை என்று சொன்னார்கள்.போய் பாருங்கள்" என்றாராம். ஆபீஸில் விசாரித்தால் அவர்கள் சில கடிதங்களுக்கு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றார்களாம். அதை வாங்கிக் கொடுத்துவிட்டு, திருப்தியடையாமல் மீண்டும் பெரியவரிடம் வந்து இன்னும் பெரிசாக ஏதாவது செய்யட்டுமா? என்று கேட்டாராம். "இல்லை. இது போதும். எப்ப வேனுமோ, அப்ப யாராவது வருவா. அவா கொடுப்பா. நீங்க ஏதாவது செய்ணும்னா நீங்களே நேரடியாக மக்களுக்கு செஞ்சுடுங்கோ" என்றாராம்.

இந்த உண்மையான ஜகத்குருவுக்கு இருந்த சிந்தனை இன்று பெரும்பாலான கார்பரேட் சாமியார்களிடம் இல்லை. இதில் காஞ்சி மடமும் விதிவிலகல்ல.

1 comment:

Raghav said...

"இதில் காஞ்சி மடமும் விதிவிலகல்ல." - இந்த பிரச்சனை ஆதிசங்கரர் காலத்தில் இருந்து இருக்கிறது...ஒரு நெல்லி கணி வைத்து இருபது கூட hoarding என்று நினைத்த மக்கள் இருந்த போது... ஊருக்கே தானம் தந்தவரும் இருந்திருக்கிறார். சங்கரர் தானம் தந்தவரிடம் 'சொத்து சேர்க்கும்' மனதை வெறுத்து தானம் வாங்க மறுத்தார்.

இது கல்யாணம் செய்து கொள்வது போல, necessary evil. You cant really do without it.

இதை ஒரு இயக்கத்தின் இயல்பு என்று தான் கொள்ள வேண்டும். சிவாஜி படத்தில் வருவது போல் "இங்க கக்கூஸ் கட்டனும்னா கூட லஞ்சம் கொடுத்துதான் ஆகணும்"-கிர உலகத்தில் இந்த பிரச்சனைகளை அறவே தவிர்ப்பது மிக கடினம்.